இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கின்றது.
பேரனர்த்தத்தின் பின்னர், நாட்டை கட்டியெழுப்பவும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியின் விமர்சனங்களும் அதேநேரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
இருப்பினும், பொதுமக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவிக்கின்றனர்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் இலங்கை அரசியலில் நகர்த்தப்படும் முக்கிய காய்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
