Home இலங்கை அரசியல் ரணிலின் கைதுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சஜித்தின் கட்சி

ரணிலின் கைதுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சஜித்தின் கட்சி

0

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, முன்னாள் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது,

இது ஒரு திட்டமிட்ட அரசியல் சதி என்றும் அந்தக்கட்சி கூறியுள்ளது.

ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு

அரசாங்க ஆதரவு சமூக ஊடகத்தில்; விளம்பரப்படுத்தப்பட்ட இந்த கைது, சட்டத்தின்
ஆட்சியை சவால் செய்வதாகவும், ஒரு கட்சி அரசை நிறுவுவதற்கான அரசாங்கத்தின்
மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம், பிராந்திய மற்றும் மாவட்டக் குழுக்கள் மற்றும்
உள்ளூர் அரசாங்க நிதியுதவி மீதான கட்டுப்பாடுகள் போன்ற அரசாங்க முயற்சிகளை
விமர்சித்துள்ளது.

இது போன்ற நடவடிக்கைகள் பல கட்சி அரசியலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன
என்றும் ஐக்கிய மக்கள் சக்தி வாதிட்டுள்ளது.

பொது சேவை தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஒரு சர்வாதிகார
அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன என்றும் கட்சி எச்சரித்துள்ளது.

எனவே, ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்
சிவில் அமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு
விடுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version