இலங்கை மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க பாடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, குடியிருப்பை வழங்குவதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எழுப்பப்பட்ட கேள்வி
“போரில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகளுக்கு நிலம் வழங்க முடிந்தால், போரை முடிவுக்குக் கொண்டுவர அரசியல் தலைமைத்துவம் அளித்த தலைவருக்கு வீடு கொடுப்பது பாவமா?
அவ்வாறானால், முன்னாள் ஜனாதிபதிகள் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியிருந்தால், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், மகிந்த அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் தவறு செய்திருந்தால், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரச குடியிருப்பு
இதற்கமைய எமது கட்சி அரச குடியிருப்பு போன்ற விடயங்களை எதிர்க்கவில்லை. எனினும் முன்னாள் ஜனாதிபதியின் அரசியலுடன் நாங்கள் உடன்படவும் இல்லை.
ஆனால் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களை மாற்றத்திற்கு இட்டுச் சென்ற தலைவர் ஆவார்” என்றார்.
