Home இலங்கை அரசியல் பொலிஸாரின் செயற்பாடுகள் கடும் அரசியல் பயப்பட்டுள்ளது

பொலிஸாரின் செயற்பாடுகள் கடும் அரசியல் பயப்பட்டுள்ளது

0

இலங்கையில் பொலிஸாரின் செயற்பாடுகள் கடும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மைய நாட்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் அரசியல் கண்காட்சிகளாக அல்லது ஊடக கண்காட்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது என தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் அரசாங்க பிரசார இயந்திரத்தின் ஓர் பங்குதாரராக செயல்படுவது தெரிகின்றது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதாண தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் இந்த விடயம் அம்பலமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஜகத் விதான முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் குறிப்பாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் பொலிஸ் மா அதிபரின் கருத்துக்கள் மூலம் கடும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version