Home இலங்கை அரசியல் தேர்தலில் சஜித்திற்கு இன்னும் 15 இலட்சம் வாக்குகளே தேவை : அமீர் அலி தெரிவிப்பு

தேர்தலில் சஜித்திற்கு இன்னும் 15 இலட்சம் வாக்குகளே தேவை : அமீர் அலி தெரிவிப்பு

0

எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியில் தான் இங்குள்ள
மக்களின் வெற்றி தங்கி உள்ள நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு 54 இலட்சம் வாக்குகள்
ஏற்கனவே உள்ளது, இருப்பினும் மேலதிகமாக 15 லட்சம் வாக்குகளே எமக்கு
தேவைப்படுகின்றது அதற்கான பணிகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம் என
முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ் எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (28) சஜித் கட்சி ஆதரவாளர்களை
சந்தித்த போது அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அதிகமான வீட்டுத் திட்டங்கள்

மேலும் தெரிவிக்கையில், 
தற்போதைய தேர்தல் கள நிலவரப்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது
இடத்தில் உள்ளார் அடுத்து வரும் சில தினங்களில் நாமல் ராஜபக்ச இந்த இடத்துக்கு
வந்து விடுவார்,

ஏனெனில் அவர்களது கட்சிக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது.

இலங்கையில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சியாக மொட்டுக் கட்சியும் ஐக்கிய மக்கள்
சக்தியும் தான் காணப்படுகின்றது.ரணிலின் கட்சிக்கு வாக்கு
வங்கி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஜேவிபி கட்சிக்கும் 4 இலட்சம் வரையிலான வாக்குகள் காணப்படுகிறது, தற்போது
அக்கட்சி ஒரு வளர்ச்சி போக்கினை காட்டுகிறது

சஜித் பிரேமதாசவின் வெற்றி என்பது நிச்சயமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில்
இலங்கையிலே அதிகமான வீட்டுத் திட்டங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை
எடுத்தவர் சஜித் பிரேமதாச.

அவர் ஜனாதிபதி ஆனால் இந்த வீடமைப்பு அமைச்சினை எம்மிடம் வழங்கி அனைத்து
வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளார்” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version