Home முக்கியச் செய்திகள் மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித்

மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித்

0

சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் செய்துள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் (Sajith Premadasa) பங்குபற்றி வருகின்றார்.

இந்த நிலையில் , இன்றையதினம் (12) சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து கையளிக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அநுராதபுரம் பாடசாலையில் உணவு ஒவ்வாமை: மாணவர்கள் பலர் பாதிப்பு

மாணவர்கள் சோர்வடைந்திருந்தனர்

குறித்த நிகழ்வு பி.ப 2.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் இரண்டு மணிக்கு முன்னர் குறித்த நிகழ்வுக்கு தயாராக இருந்துள்ளனர்.

இருப்பினும், ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே சஜித் பிரேமதாச குறித்த நிகழ்வுக்கு வருகை தந்துள்ளார்.

இதனால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்திருந்ததை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம் : குடும்பத்தினர் கலக்கம்

போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் திணைக்கள ஊழியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

NO COMMENTS

Exit mobile version