Home இலங்கை அரசியல் வடக்கின் எல்லையில் நின்று கிழக்கினை கண்காணித்த சஜித்

வடக்கின் எல்லையில் நின்று கிழக்கினை கண்காணித்த சஜித்

0

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட எதிர்கட்சி
தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கொக்கிளாய் பகுதியில் வசித்து வரும் மக்களின்
நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டுள்ளார். 

முல்லைத்தீவு – கொக்கிளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலைக்கு மாணவர்களுக்கான
ஸ்மார்ட் வகுப்பறையினை திறந்து வைத்த அவரிடம் கொக்கிளாய் மக்கள் விடுத்த
கோரிக்கைக்கு அமைவாக கொக்கிளாய் முகத்துவாரம் பகுதிக்கு அவர் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, வடக்கு – கிழக்கு மாகாணத்தின் எல்லை பகுதியாக காணப்படும்
கொக்கிளாய் – புல்மோட்டை கடல் இணைப்பிற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மக்களின் கோரிக்கை 

கொக்கிளாய் பகுதியில் வசித்து வரும் பெரும்பான்மை மக்கள் தங்களின்
காணிப்பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை போன்றவற்றை சஜித் பிரேமதசவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

மேலும், வடக்கினையும் கிழக்கினையும் இணைக்கும் கொக்கிளாய் பாலம் இல்லாத நிலையில்
மக்களின் கடல் போக்குவரத்தின் சிரமத்தினையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version