Home இலங்கை அரசியல் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வந்த நிவாரண மையத்திற்கு இடையூறு! மன்னிப்பு கோரிய சஜித்..

தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வந்த நிவாரண மையத்திற்கு இடையூறு! மன்னிப்பு கோரிய சஜித்..

0

கண்டி மாநகர சபைக்குள் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வந்த நிவாரண மையத்திற்கு
இடையூறு ஏற்படுத்திய சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று
நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அறிவித்துள்ளார்.

X தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

சபை உறுப்பினர்களின் “மோசமான நடத்தை
மற்றும் தேவையற்ற நடவடிக்கைகள்” காரணமாக பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்
மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தார்.

அவசர கால நிவாரண முயற்சி

குறிப்பாக, சமூகங்கள் மனிதாபிமான ஆதரவை நம்பியிருக்கும் இந்த நேரத்தில்,
தன்னார்வக் குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்த உறுப்பினர்களின்
நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தன்னார்வலர்களால் இந்த நிவாரண சேகரிப்பு மையம்
அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், கண்டி மாநகர சபையில் உள்ள ஆளும் கட்சியைச் சேராத சில உறுப்பினர்கள்,
இந்த நடவடிக்கைத் தொடர்வதைத் தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இது பொதுமக்களின் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அவசர கால நிவாரண முயற்சிகளை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகளை கட்சி ஒருபோதும்
சகித்துக் கொள்ளாது என்றும், அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் நடந்து வரும்
அனர்த்த பதிலளிப்புச் செயல்பாட்டின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின்
தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச மீண்டும்
வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version