Home இலங்கை அரசியல் தொடருந்து டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம்..! வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதி

தொடருந்து டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம்..! வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதி

0

தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை, தொடருந்து டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி
பயணிகள் தற்காலிகமாகப் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றையதினம்(3) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சீரற்ற வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக தொடருந்து சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளை
அடுத்து, பயணிகளின் வசதிக்காக இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்
தெரிவித்தார்.

தற்காலிக ஏற்பாடு

அவர் மேலும் கூறுகையில், “போக்குவரத்து சேவைகள் டிசம்பர் 10 ஆம் திகதிக்குள்
வழமைக்கு திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகள்
குறித்துப் பேசிய அவர், இன்று வரையில், தடைப்பட்டிருந்த 200 க்கும் மேற்பட்ட
வீதிகள் சீர் செய்யப்பட்டு, போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார்.

இந்த தற்காலிக ஏற்பாடு, சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து தொடருந்து சேவைகள்
முழுமையாக மீட்டெடுக்கப்படும் வரை பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில்
அமைந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version