Home இலங்கை அரசியல் ரணிலின் அழைப்பை அடியோடு நிராகரித்தது சஜித் தரப்பு

ரணிலின் அழைப்பை அடியோடு நிராகரித்தது சஜித் தரப்பு

0

தேசத்தைப் பாதுகாப்பதற்கு தமது ஆதரவை வழங்கினால், சஜித் அணியினரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை மீள இணைத்துக் கொள்வதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) விடுத்த கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) மற்றும் ஏனையவர்கள் அடியோடு நிராகரித்துள்ளனர்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்(SM Marikar) மற்றும் கட்சியின் பிரசார முகாமையாளர் சுஜீவ சேனசிங்க(Sujeeva Senasinghe) ஆகியோர், செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

“தேசத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அவருக்கு ஆதரவளித்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் எங்களின் உறுப்புரிமையை மீள இணைத்துக் கொள்ள அதிபர் முன்வந்துள்ளார்.

மொட்டுவின் அமைச்சர்களுடன் இருக்க தயார் இல்லை

எவ்வாறாயினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க(prasanna ranatunga), பிரசன்ன ரணவீர(prasanna ranaweera) மற்றும் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena)ஆகியோருடன் நாங்கள் மேடையில் இருக்க விரும்பாததால் இந்த வாய்ப்பை ஏற்க நாங்கள் தயாராக இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.

குழப்பத்தில் ரணில்

“அதிபர் தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் அதிபர் இருப்பதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் முன்னர் கூறியது போல் பதினைந்து முதல் இருபது வரையிலான ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்களின் ஆதரவைப் பெற முடியாது.

எவ்வாறாயினும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம்,” என்றார்.

டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்க போன்ற மறைந்த ஐ.தே.க தலைவர்களின் அபிவிருத்தி பாணியை மீண்டும் ஒருமுறை ஐக்கிய மக்கள் சக்தி வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என சேனசிங்க தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version