சலார்
கே.ஜி.எப் படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சலார்.
இப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
‘Racing Isn’t Acting’.. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள அஜித் குமார் ரேஸிங் படம்.. டிரைலர் இதோ
பிரபாஸுக்கு கம்பேக் திரைப்படமாகவும் அமைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளிவரவிருக்கிறது.
மொத்த வசூல்
இந்நிலையில், இன்றுடன் சலார் திரைப்படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், சலார் படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 600+ கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
