Home முக்கியச் செய்திகள் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்…! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர்

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்…! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர்

0

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு என்பன குறைந்தது 24% ஆக அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Mathumabandara
) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்க ஊழியர்களின் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் முறையை உருவாக்குவோம் என்றும் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25,000 ரூபாயை வாழ்க்கைச் செலவாக எங்கள் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அத்துடன், எமது அரசாங்கத்தின் கீழ், அரச சேவை கொடுப்பனவுகளுடன் கூடிய குறைந்தபட்ச ஊதியத்தை 57,500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்புடன் இது ஒருங்கிணைக்கப்படுகிறது.

பதவி உயர்வு

மேலும், அரசு பணியில் உள்ள சிலர் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசாங்க ஊழியர்களின் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் முறையை அரச சேவை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் குறைந்தபட்சம் 24% அதிகரிப்பு இருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கும்

NO COMMENTS

Exit mobile version