Home இலங்கை சமூகம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்

0

அனைத்து அரச ஊழியர்களின் ரூ.25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் 24% ஆகக் குறைந்த அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு உரித்துடையவர்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

2024 மே 27ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024/20 தீர்மானத்தின் அடிப்படையில் பல வருடங்களாக நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர், அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை 2024 ஆகஸ்ட் 12 ஆம் திகதி மீண்டும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள அதிகரிப்பு நிச்சயம்

அதன் பரிந்துரைகளின்படி, வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25,000 ரூபாயாக உயர்த்துதல், அடிப்படைச் சம்பளத்தை குறைந்தபட்சமாக 24% ஆக உயர்த்துதல், மருத்துவக் காப்புறுதி முறையை அறிமுகப்படுத்துதல்.

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் பாதிக்கு சமமான வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குதல்.

செப்டம்பர் 4, 2024 அன்று, மேற்படி ஆணைக்குழுவின் முழு அறிக்கையும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, அதன்படி 08 அம்சங்களில் கொள்கை உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரவு செலவுத் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் கலந்து கொண்டதுடன், பண ஒதுக்கீடு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, இந்த சம்பள அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version