Home இலங்கை அரசியல் முதல் வரவு செலவுத் திட்டத்திலேயே அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜனாதிபதி அறிவிப்பு

முதல் வரவு செலவுத் திட்டத்திலேயே அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜனாதிபதி அறிவிப்பு

0

முதல் வரவு செலவுத் திட்டலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்றையதினம் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு பணமும் ஒதுக்கப்பட்டு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது, எனவே கொடுத்திருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

 

அநுர அரசாங்கம்

நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும், பணம் ஒதுக்கினாலும் சரி, ஒதுக்காவிட்டாலும் சரி, தேசிய மக்கள் மக்கள் சக்தி முதல் வரவு செலவு திட்டத்திலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும்.

இந்த சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர், அரச துறையினர் அதிக வீத வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு கொண்டு வந்தனர்.

எனவே, அதை உடைக்கவே இதுபோன்ற பொய்யான தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன.

இன்னும் ஒரு மாதம், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஆட்சி விழுந்து விடும் என்கிறார்கள்.

இந்த நாட்டை கட்டியெழுப்பாதவரை தேசிய மக்கள் படையால் கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார். 

NO COMMENTS

Exit mobile version