Home இலங்கை சமூகம் அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது  இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும் என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

இலங்கையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

அவர்களின் அதிகமானோர்களின் சம்பளம் குறைவாக இருப்பதோடு அரச ஊழியர்கள் வறுமையில் உள்ளனர்.

தேர்தல் வரும் போது மட்டும் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறுகின்றார்கள்.

அரசாங்கம் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அதிகளவான சலுகைகளை அனுபவிக்கும் போது இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்ககூடிய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க சிரமப்படுகின்றார்கள்.

அரசாங்கம் செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆனால் ஐஎம்எப் இன் நிபந்தனையின் படி சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாக இருந்தால் வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

இந்த விடயங்களை மேலும் அலசி ஆராய்கின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு நிகழ்ச்சி,  

https://www.youtube.com/embed/z_KqUAPydM8

NO COMMENTS

Exit mobile version