தமிழ் மக்களுக்கு வெளிப்படைத்தன்மை பொருந்திய தலைவர்களே வேண்டும் நாடாளுமன்றத்தில் பூச்சாண்டி காட்டும் தலைவர்கள் தேவையில்லை என தமிழ் மக்கள்
கூட்டணியின் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்(V. Manivannan) தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிப்படையான மாற்றம்
“தெற்கில் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக வெளிப்படையான
மாற்றம் ஒன்றின் தேவைப்பாடு உணரப்பட்ட நிலையில் அதற்கு எதிராக ஒரு அமைப்பு
மாற்றத்தை உருவாக்கியது.
அவ்வாறான ஒரு மாற்றம் தமிழ் மக்களிடையே வெளிபாடைத் தன்மை உள்ள அரசியல்வாதிகள்
அல்லது அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க வேண்டும்.
ஏனெனில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்திற்கு நாட்டின் இலஞ்சம் ஊழல்
பிரதான காரணமாக சுட்டிக் காட்டப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு
விடயத்தில் தமிழ் தலைவர்கள் வெளிப்படையாக செயற்படாது பூச்சாண்டிகளாக
செயற்பட்டனர்.
இலஞ்ச ஊழல்
நான் யாழ் மாநகர முதல்வராக இருந்தபோது இலஞ்சம் ஊழலுக்கு எதிராக வெளிப்படையாக
முறைப்பாடுகளை பெறுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி அதற்கான நடவடிக்கைகளையும்
மேற்கொண்டோம்.
அது மட்டும் இல்லாது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் முதலீடுகளை
மாநகரத்துக்கு கொண்டு வருவதற்கான முன்னேற்பாட நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு
அவர்களின் நிதி உதவியின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தோம்” என்றார்.