Home இலங்கை சமூகம் உப்புத் தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

உப்புத் தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

0

இலங்கைக்கான உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் (Ministry of Health) உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்பு 

அத்துடன் உப்பு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தேங்காய் மற்றும் அரிசியை தொடர்ந்து உப்பின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, பொதியிடப்பட்ட 400 கிராம் தூள் உப்பு விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும் பொதியிடப்பட்ட ஒரு கிலோ கட்டி உப்பு விலை 120 ரூபாவிலிருந்து 180 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version