Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் அறிவிப்பு

0

பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

இதில் ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாகீர் மாக்கார், டலஸ் அலகப்பெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிஷாம் காரியப்பர் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் இன்று (11) தாக்கல் செய்துள்ளது.  

வேட்புமனு தாக்கல்

இந்தநிலையில், இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்புமனுவை கையளித்தனர்.  

அத்துடன், நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்தல் ஆணைக்குழு

மேலும், இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.  

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் நேற்றைய தினம் (10) வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://ibctamil.com/article/samagi-jana-balawegaya-national-list-details-1728641957

NO COMMENTS

Exit mobile version