Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சிஐடிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சிஐடிக்கு அழைப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றையதினம்( 5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஐடிக்கு அழைப்பு

அதேபோல், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா, இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நேற்றையதினம்(4) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version