சமந்தா
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
நடிகை சமந்தாவின் நடிப்பை தாண்டி அவருடைய நடனத்திற்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில், இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ”ஊ சொல்றியா” பாடலில் நடனமாடி கவனம் ஈர்த்தார்.
சமந்தாவின் படத்தை வீட்டின் மாடியில் வரைந்த ஓவியர்.. கீர்த்தி சுரேஷ் கொடுத்த கமெண்ட்
நடனமாடுகிறாரா சமந்தா?
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறப்பு பாடலில் சமந்தா நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ‘பெத்தி’ படத்தில் ஒரு சிறப்பு பாடலில் நடனமாட தயாரிப்பாளர்கள் சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
