Home இலங்கை அரசியல் போதைப்பொருள் குற்றச்சாட்டுள்ள இருவரை பாதுகாக்கும் அரசாங்கம் : சாமர சம்பத் வெளியிட்ட தகவல்

போதைப்பொருள் குற்றச்சாட்டுள்ள இருவரை பாதுகாக்கும் அரசாங்கம் : சாமர சம்பத் வெளியிட்ட தகவல்

0

தேசிய மக்கள் சக்தியின் இரு பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாமர சம்பத் தசநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள்) விவாதத்தில் இன்று (10.11.2025) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,

தெஹிவளை- கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர்

குமாரி கருணாஜீவ தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் மகன் ஒரு மாதத்திற்கு முன்னர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அவர் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் பேலியாகொடை பிரதேச சபையின் உறுப்பினரின் கணவர் போதை பொருளுடன் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பிலும் எதுவும் செய்யவில்லை.இவர்கள் இருவரின் வங்கி கணக்குகளில் பெரும் தொகை பணம் இருப்பதாக தெரியவந்துள்ளது.ஆனால் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் ஒன்றும் செய்யவில்லை.

பொலிஸ் மா அதிபர் 2025.11.05 வெளியிட்ட வர்த்தமானி அறிக்கையில் சந்தேக நபர்களின் விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபருக்கு,
பேலியாகொடையில் அரசாங்க உறுப்பினர் கைது செய்யப்பட்ட பின்னரே கண் திறந்துள்ளது.

இதற்கு முன் கைது செய்யப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை இவர்களுக்கு ஏன் எடுக்கவில்லை என்றார்.

 

NO COMMENTS

Exit mobile version