Home இலங்கை அரசியல் தமிழ் செயலாளரை அவமானப்படுத்திய சாமர சம்பத்

தமிழ் செயலாளரை அவமானப்படுத்திய சாமர சம்பத்

0

தமிழர் ஒருவர் சொல்வதை கேட்டு வேலை செய்ய வேண்டாம் எனவும் சுயமாக தீர்மானங்கள் எடுக்குமாறும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு, சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றில் அறிவுரை கூறினார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள்) விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர்

தொடர்ந்து பேசிய அவர், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ.விமலேந்திரராஜா நிதியமைச்சில் இருந்து தற்போதைய அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வர்த்தக மத்திய நிலையங்களை ஒன்றிணைத்து நெசனல் எக்ரோ மார்க்கட் என்ற ஒரு நிறுவனத்தை அமைத்துள்ளார்.இந்த வர்த்தக மத்திய நிலையங்கள் 90 வருடங்களாக மாட்டச் செயலாளர், பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்டு வந்தது.

இதை நிறுவனமாக்கினால் வர்த்தகர்களுடன் மோத வேண்டி வரும்.வர்த்தகர்களுடன் மோதி அரசியல் நடத்த முடியாது.
விவசாயிகளின் மரணச் சடங்கில் இருந்து அனைத்துக்கும் வர்த்தகர்களே உதவி செய்கின்றனர்.

முடிந்தால் கோடிஷ்வர வர்த்தகர் டட்லிலை பகைத்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்தவும்.நீங்கள் இவ்வாறு செய்வதால் முழு வர்த்தக மத்திய நிலையங்களில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ள போகிறீர்கள்.

அமைச்சின் செயலாளர்களின் தனிப்பட்ட பலன்களுக்காக எடுக்கும் முடிவுகளை அனுமதிக்க வேண்டாம்.மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்கள் இருந்தால் கைவிடுங்கள். முன் வைத்த காலை ஒரு அடி பின்னுக்கு எடுப்பதை சிந்திக்க வேண்டாம் என்றார்.

 

NO COMMENTS

Exit mobile version