முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மறைந்த ஆர். சம்பந்தன்(sampanthan) பயன்படுத்திய கொழும்பு 7, பி12 மகாகமசேகர மாவத்தை உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட இந்த உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்த 2019ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இறக்கும் வரை வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம்
அதன்படி, அவர் இறக்கும் வரை அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ வாய்ப்பு வழங்கப்பட்டது.
அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதம்
சம்பந்தன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அண்மையில் அமைச்சரவைக்கு நினைவூட்டல் அனுப்பப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு ஹத்தாவில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ளது. அதன் பராமரிப்பு பணிக்காக, ஐந்து பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.