Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்

நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் சிறிலங்கா நாடாளுமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (03) பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை அவரது பூதவுடல் அஞ்சலிக்காக நாடளுமன்றில் வைக்கப்படவுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மாலை அவரது பூதவுடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறுதி கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sampanthan-s-dead-body-brought-parliament-1719996334

NO COMMENTS

Exit mobile version