Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும் இரா.சம்பந்தனின் பூதவுடல்

யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும் இரா.சம்பந்தனின் பூதவுடல்

0

தமிழரசுக் கட்சியின் மூத்த பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் நாளைய தினம் (04) யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் பூதவுடன் அங்கு தந்தை செல்வா அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக அங்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீதரனின் வேண்டுகோள்

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தனின் குடும்பத்தார் அவரது பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நாளை காலை 10.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரையில் சம்பந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் வைக்கப்படும் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

 

https://www.youtube.com/embed/rJkmMhbdSp8

Source: https://ibctamil.com/article/sampanthan-s-dead-body-to-jaffna-1720015533?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version