Home சினிமா இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

0

சமுத்திரக்கனி

தமிழ் சினிமாவில் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே போல் நடிப்பிலும் மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தையே பிடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவித்து வருகின்றன. கடைசியாக இவர் தெலுங்கில் நடித்திருந்த ஹனுமன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு 

இந்த நிலையில், திரையுலகில் முக்கிய நபராக விளங்கி வரும் சமுத்திரக்கனியின் சொத்து விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமுத்திரக்கனி ஒரு படத்திற்கு ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

விஜய் மகனுடன் கைகோர்க்க ஆசைப்படும் 20 வயது விஜய் டிவி நடிகை.. யார் அந்த நடிகை தெரியுமா

ஸ்கார்பியோ – ரூ. 21 லட்சம், Audi A4 – ரூ. 45 முதல் ரூ. 53 லட்சம், BMW X3 – ரூ. 68 முதல் ரூ. 72 லட்சம் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார். இவருடைய வீட்டின் மதிப்பு சில கோடிகள் வரும் என்கின்றனர். மேலும், இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையானது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version