Home இலங்கை குற்றம் வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை

வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை

0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ள மண் கடத்தல் தொடர்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. 

மணல் கொள்ளை 

இது குறித்து மேலும் தெரிய வருகையில், 

செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் மணல் கொள்ளை
இடம்பெற்று வருகின்றது. முன்னர் மணல் திட்டாக இருக்கும் பகுதிகளில் இருந்து
மணல் எடுத்து செல்லப்பட்டது.

தற்போது கிராமப் பகுதியில் அதிகமாக கட்டிடங்கள்
அமைப்பதனால் மணல் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் மக்கள் குடியிருப்புகள்
நடுவில் மணல் கடத்தல் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு மணல் கொள்ளை தொடர்ந்தால் தொடர்ந்தால் இக் கிராமப் பகுதியில் பாரிய
நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள்
உள்ளன என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version