சஞ்சீவ் வெங்கட்
சஞ்சீவ் வெங்கட் என்று சொன்னதும் முதலில் இளைய தளபதி விஜய்யின் நண்பர் என்று தான் ரசிகர்களுக்கு நியாபகம் வரும்.
அதன்பின், சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியல் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது, பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பின் அவர் நடித்த சில படங்கள் நியாபகத்திற்கு வரும்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் தொடர்ந்து சீரியல்களில் தலைக்காட்டி வருகிறார். கடந்த வருடம் லட்சுமி தொடரில் கமிட்டாகி நடித்து வந்தார்.
நடிகரின் பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது அம்மா, அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியவில்லை என கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
அதில் அவர், சினிமாவில் இப்போது வாய்ப்பு வருகிறது, இதில் நுழையும் போது பெரிய நடிகரா வருவேன் என்று ஆசையாக வந்தேன். ஆனால் இளம் வயதில் சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை, அதற்காக கண்ணாடி முன்னாடி நின்று அழுது இருக்கேன்.
நிலாவே வா பட சமயத்தில் நீ நல்ல நடிகனா வருவ என என் அம்மா சொன்னாங்க. ஆனால் அம்மா, அப்பா இறக்கும் வரை அது நடக்காமலேயே போயிடுச்சு.
அவங்க ஆசையை நிறைவேற்ற முடியாதது எனக்கு பெரிய வருத்தமாக இப்போதும் இருப்பதாக கூறி கண் கலங்கியுள்ளார்.
