Home இலங்கை அரசியல் மகிந்தவை சந்திக்குமாறு அநுரவுக்கு அறிவுரை! கடும் கோபத்தில் மொட்டுக் கட்சியினர்

மகிந்தவை சந்திக்குமாறு அநுரவுக்கு அறிவுரை! கடும் கோபத்தில் மொட்டுக் கட்சியினர்

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஓய்வான நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை  சந்தித்து தொழில் முறை அரசியலை கேட்டு தெரிந்து கொள்ளுமாறு பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவதூறுகள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாட்டில் யாராவது மீண்டும் அநுரகுமார திசாநாயக்கவே இந்நாட்டின் ஜனாதிபதி என சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? இல்லை இது வரை யாரும் அவ்வாறு சொல்லவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார மற்றும் அவரின் சகபாடிகள் எமக்கு பல்வேறான பல அவதூறுகளை அவிழ்த்து விட்டுள்ளமை தொடர்பில் கட்சி ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

அவற்றுக்கு எதிராக எம்மை நடவடிக்கை எடுக்குமாறு குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்சி ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்  என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version