சந்தானம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப் லிஸ்டில் வந்துவிடுவார் நடிகர் சந்தானம்.
கவுண்டமணி-செந்தில், வடிவேலு, விவேக் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர் சந்தானம் தான்.
பிக்பாஸ் 9வது சீசன் குறித்து விஜய் டிவி அறிவித்த அப்டேட்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
ஒருகாலத்தில் எந்த ஒரு புதுப்படங்கள் வந்தாலும் அதில் சந்தானம் இல்லாமல் இருக்காது, அந்த அளவிற்கு பிஸியாக படங்கள் நடித்துக்கொண்டே இருந்தார்.
ஒருகட்டத்தில் காமெடியன் போதும் ஹீரோவாக களமிறங்கலாம் என்று கலக்கி வருகிறார்.
திருமணம்
நடிகர் சந்தானத்திற்கு கடந்த 2004ம் ஆண்டு உஷா என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு நிபுன் மற்றும் ஹாசினி என 2 குழந்தைகள் உள்ளனர். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் போது தனது மகன் 12வது படித்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு திருமண விழாவில் நடிகர் சந்தானம் தனது மகனுடன் கலந்துகொண்டிருப்பதாக தெரிகிறது. அப்போது சந்தானம் மற்றும் அவரது மகன் நடிகர் சூர்யாவுடன் புகைப்படம் எடுக்க அது இப்போது வைரலாகி வருகிறது.
அதில் சந்தானம் மகனை கண்ட ரசிகர்கள் யப்பா செமயாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
