Home இலங்கை அரசியல் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அநுர கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கோரும் மொட்டு கட்சி

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அநுர கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கோரும் மொட்டு கட்சி

0

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி (SLPP) கோரியுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) கூடுதல் அதிகாரத்தை வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிங்கள வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் தெளிவான ஆணை

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெளிவான ஆணையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை பலத்திற்கு தலை சாய்ப்பது ஜனநாயகம்.

எனினும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை நிராகரிக்கும் மக்களின் சார்பில் மொட்டு கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிப்புச் நிலையங்களுக்குச் செல்லாதவர்கள் ஆகிய தரப்புக்களை இணைத்தால் அதுவே பெரும்பான்மை பலம் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version