Home சினிமா அந்த சீனால் அவமானமாக இருந்தது.. நடிகை சரண்யா பொன்வண்ணன் உடைத்த ரகசியம்

அந்த சீனால் அவமானமாக இருந்தது.. நடிகை சரண்யா பொன்வண்ணன் உடைத்த ரகசியம்

0

சரண்யா பொன்வண்ணன்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன். அம்மா கதாபாத்திரம் என்றாலே ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் இவர் தான்.

நாயகன், கருத்தம்மா, அஞ்சலி, பசுபொன் போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

எம்டன் மகன் திரைப்படத்தில் வடிவேலு பரத் நாசருடன் நடித்திருக்கும் ஒரு பிரபலமான காமெடி ஸீன் இன்றளவும் பலரால் ரசிக்கப்படும் ஒரு காட்சி. இந்த காட்சி குறித்து நடிகை சரண்யா பகிர்ந்த விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

நயன்தாராவிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன தெரியுமா?.. அடேங்கப்பா!

ரகசியம் 

அதில், ” இந்த காட்சியில் நடுத்தெருவில் அவ்வளவு பேர் சுற்றி நிற்க உண்மையாகவே வெறும் மண் தரையில் விழுந்து உருள சொன்னார்கள். நான் கண்டிப்பாக முடியாது என்று மறுத்துவிட்டேன். எனக்கு ஒரே அவமானமாக இருந்தது.

அப்போது திருமுருகன் சார் தனியாக என்னை அழைத்து இந்த காட்சியை நான் செய்தால் தான் படத்தில் ஒர்க் அவுட் ஆகும் என்று சொல்லி புரியவைத்தார்.

நானும் ஒரு டேக் தான் என்று சொல்லி எடுக்கப்பட்ட சீன் தான் அது. அந்த சீனுக்காக நான் ஸ்டேட் அவார்ட் வாங்குனேன். இதற்கு, திருமுருகன் சார் வடிவேலு, பரத் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version