Home இலங்கை அரசியல் பொன்சேகாவிடமிருந்து காப்பாற்றுமாறு மைத்திரியிடம் கோரிய முக்கிய புள்ளி

பொன்சேகாவிடமிருந்து காப்பாற்றுமாறு மைத்திரியிடம் கோரிய முக்கிய புள்ளி

0

சரத் பொன்சேகாவிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்ததாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சமீப காலத்தில் சரத்பொன்சேகா தெரிவிக்கும் கருத்துக்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பல ஊடகங்களில் பல்வேறான கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

சரத்திடமிருந்து என்னை காப்பாற்றவும்

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றைய தினம் இரவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் சுந்திரக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிடம் இருந்து தன்னை பாதுகாக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதன்போது தன்னை ஒரு பெரும் தலைவனாக நினைத்துக்கொண்ட மைத்திரி,நான் அதை பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என சொல்லியுள்ளார். பின்னர் பசில் ராஜபக்ச மொட்டுக்கட்சியை ஆரம்பித்து மைத்திரியை ஏமாற்றினார்.

முதுகெலும்பற்ற மைத்திரி

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இராணுவ அதிகாரிகள் மைத்திரிக்கு எதிராக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டு தூதுவராலயங்களில் கடமையாற்றிய ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்கள் அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர்.

இராணுவத்தினர் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களின் பெயர் பட்டியல் அன்று ஜனாதிபதியாக இருந்த மைத்திரிடம் வழங்கப்பட்டது.அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இருக்கவில்லை. ஏனென்றால் ராஜபக்சர்களுக்கு சார்பாகவே மைத்திரி செற்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version