Home இலங்கை அரசியல் சஜித்திற்கு ஆமாம் போடுபவர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்: சரத் பொன்சேகா விளாசல்

சஜித்திற்கு ஆமாம் போடுபவர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்: சரத் பொன்சேகா விளாசல்

0

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பத்து இலட்சம்
வாக்குகளை மட்டுமே பெறும் என்றும், இது முன்னைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை
விட மிகக் குறைவாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியை விட்டு வெளியேறல்

மேலும்
குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள்
ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் குறிக்கின்றது.

முதலில் குமார வெல்கம வெளியேறினார். பின்னர் சம்பிக்க, ராஜித, தலதா மற்றும்
பொன்சேகா ஆகியோர் வெளியேறினர்.

எஞ்சியுள்ளவர்கள்

மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில், கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாசவின் ஒவ்வொரு முடிவையும் ஏற்றுக் கொண்டு, ஆமாம்
போடுபவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இந்தநிலையில், அத்தகையவர்களுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பயணத்தை
முன்னெடுப்பது கடினமான காரியம் என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version