Home முக்கியச் செய்திகள் யாழில் இருந்து வந்தால் தோடு போடக்கூடாது: தனியார் தொலைக்காட்சியில் உருட்டு

யாழில் இருந்து வந்தால் தோடு போடக்கூடாது: தனியார் தொலைக்காட்சியில் உருட்டு

0

அண்மைக்காலமாக இலங்கையில் பாரிய பேசுப்பொருளுக்கு உள்ளாகியிருக்கும் விடயம்தான் இந்தியாவின் தனியார் இசை நிகழ்ச்சியொன்றின் சோடிக்கப்பட்ட நாடகங்கள்.

அதாவது இலங்கையில் இருந்து செல்லும் பாடகர்கள் மீதான குறித்த நிகழ்ச்சியின் பார்வை என்பது சற்று வித்தியாசமாகவும் தனது சுயலாபத்தை அடிப்படையாக கொண்டும் காணப்படுவதை வெட்டவெளிச்சமாக பார்வையிட முடிகின்றது.

தங்களது நிகழ்ச்சியினை பிரபலப்படுத்துவதற்காக மலையகம் மற்றும் இறுதி யுத்தம் என்பவற்றை கைப்பாவையாக பயன்படுத்தி மக்களிடத்தில் தொடர்ச்சியாக இலங்கையர்களை இல்லாதப்பட்டவர்களாகவே காட்ட முயற்சித்து வருவதுடன் தொடர்ந்து எங்கு எல்லாம் இடம் கிடைக்கின்றதோ அங்கு எல்லாம் அனுதாபத்தையும் திட்டமிட்டு திணிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இது குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன் பாரிய எதிர்ப்பும் குறித்த நிகழ்ச்சிக்கு எதிராக கிளம்பி இலங்கை மக்களிடத்தில் ஆதங்கத்தையும் குறித்த நிகழ்ச்சி உருவாக்கியுள்ளது.

திறமைகளை மட்டுமே பார்க்க வேண்டிய ஒரு இடத்தில் தமது இலாபத்திற்காக மக்களிடத்தில் இவ்வாறான ஒரு விம்பத்தை உருவாக்குவது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறு குறித்த நிகழ்ச்சியில் நடைபெறும் விடயங்களை நகைச்சுவை பாணியில் மக்களுக்காக வழங்குகின்றது ஐபிசி தமிழின் இந்நிகழ்ச்சி, 

 

https://www.youtube.com/embed/buZmGARUNNk

NO COMMENTS

Exit mobile version