Home முக்கியச் செய்திகள் சரிகமபவில் நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த ஈழத்து போட்டியாளர்

சரிகமபவில் நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த ஈழத்து போட்டியாளர்

0

சரிகமப வில் கலந்து கொண்ட இலங்கை போட்டியாளர் சபேசன் தன் குரலால் ஒட்டுமொத்த அரங்கத்தையே ஈர்த்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வகையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் அதேநேரம் இலங்கையில்  பல்வேறு சர்ச்சையை கிளப்பிய ஒரு நிகழ்ச்சி தான ஜீ தமிழ் (ZEE Tamil)  சரிகமப.

தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த எபிசோடில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் Introduction Round ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதில் இலங்கை போட்டியாளர் சபேசன் இன்னிசை பாடி வரும் பாடலை பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார். அப்படியே அசல் பாடலைப் போலவே அவர் அந்த பாடலைப் பாடியுள்ளார். 

இது நடுவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததுடன், இவரின் பாடல் திறமையால் கடைசிவரை இவர் இந்த அரங்கத்தில் இருக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/embed/r8R_IPFcDAw

NO COMMENTS

Exit mobile version