Home இலங்கை அரசியல் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு நன்றி தெரிவித்துள்ள சர்வஜன பலய கட்சியின் தலைவர்

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு நன்றி தெரிவித்துள்ள சர்வஜன பலய கட்சியின் தலைவர்

0

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த வரிகள் குறித்து அனைத்துக் கட்சி
மாநாட்டை நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்ததற்காக,
சர்வஜன பலய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர, ஜனாதிபதி
மற்றும் அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான மற்றும் சவாலான நேரத்தில் அனைத்துக் கட்சி மாநாட்டிற்கான தமது
அழைப்புக்கு சாதகமாக பதிலளித்ததற்காக, அனைத்து உள்நாட்டு இலங்கை
தொழில்முனைவோர் சார்பாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை
அரசாங்கத்துக்கு தாம் மிகவும் நன்றியுள்ளவன் என்று,  அவர் தமது எக்ஸ்
பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க வரிகளின் தாக்கம் 

இலங்கை மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் எல்லாவற்றுக்கும்; மேலாக வைத்து,
அனைத்து சாத்தியமான வழிகளிலும் அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக ஜெயவீர
கூறியுள்ளார்.

இலங்கையின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்ட வழக்கத்திற்கு மாறான அமெரிக்க
வரிகளின் தாக்கம் குறித்து விவாதிக்க ஜனாதிபதி திசாநாயக்க நாளையதினம்
அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளார் என்று சபைத் தலைவர்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று(9) தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version