Home சினிமா டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு பாருங்க

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு பாருங்க

0

சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் இந்த படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி முழு படத்தையும் பார்த்த லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ்குமரன் படத்தை பற்றி ட்விட்டரில் விமர்சனம் கூறி இருக்கிறார்.

முதல் விமர்சனம்

“டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தை பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது; மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது. சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர். குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்கிற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது.

முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

மில்லியன் டாலர்ஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள “டூரிஸ்ட் ஃபேமிலி” மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்!

கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய படம் இது.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version