Home தொழில்நுட்பம் சுற்றுபாதையில் வெடித்து சிதறிய செயற்கைக்கோள்

சுற்றுபாதையில் வெடித்து சிதறிய செயற்கைக்கோள்

0

ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங்கினால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் உடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

iS-33e என்னும் செயற்கைக்கோளே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது. 

குறித்த செயற்கைக்கோளை இயக்குபவர், iS-33e ஆனது மொத்தமாக வெடித்து சிதறியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வெடிப்புக்கான காரணம் 

இந்நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விரிவான பகுப்பாய்வை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

போயிங், அதன் வணிக விமான வணிகத்தில் வேலைநிறுத்தம் மற்றும் அதன் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சிக்கல்கள் போன்ற பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், செயற்கைக்கோள் உற்பத்தியாளரான போயிங், பிற அரசு நிறுவனங்களுடன் தரவு மற்றும் அவதானிப்புகளை பகுப்பாய்வு செய்ய ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version