Home முக்கியச் செய்திகள் இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளுங்கள் – அறைகூவல் விடுக்கும் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளுங்கள் – அறைகூவல் விடுக்கும் பாதுகாப்பு அமைச்சர்

0

அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுக்கு (Israel) எதிராக ஒன்றுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகள் கூட்டாக செயல்படத் தவறுவது மத்திய கிழக்கு முழுவதும் மேலும் தாக்குதல்களை ஊக்குவிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

இதேவேளை இஸ்ரேல் தனியாக செயல்படவில்லை உளவுத்துறை, பாதுகாப்புதுறையின் ஆதரவைப் பெற்றுள்ளது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

முக்கிய அணுசக்தி மையம் 

இதேவேளை, இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களால் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency) உறுதி செய்துள்ளது.

தெற்கு தெஹ்ரானில் இருந்து 400 கி.மீ., தொலைவில் உள்ள இஸ்பஹான் யுரேனியம் மாற்று ஆலை பயங்கர சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் பல மாதங்கள் தாமதப்படுத்தப்படலாம்.

அவசர ஆலோசனைக் கூட்டம்

அதேவேளையில், 1,640 அடி ஆழத்தில் மலைக்குள் அமைந்துள்ள போர்டோ அணுசக்தி மையம் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.

இந்த சூழலில், வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் யுரேனியத்தின் இருப்பு குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/wXaR8XktFr8

NO COMMENTS

Exit mobile version