Home முக்கியச் செய்திகள் அடுத்த தேர்தலிலும் அடிவாங்கப்போகும் தமிழரசுக் கட்சி : பகிரங்கப்படுத்தும் அரசியல் ஆய்வாளர்

அடுத்த தேர்தலிலும் அடிவாங்கப்போகும் தமிழரசுக் கட்சி : பகிரங்கப்படுத்தும் அரசியல் ஆய்வாளர்

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி பாரிய தோல்வியை கட்டாயம் சந்திக்க நேரிடும் என பிரித்தானியாவின் (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T. Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சிக்குள் எல்லோரையும் அணைத்து செல்கின்ற ஒருமைப்பாடுடைய தலைமைத்துவம் இல்லை.

தென்னிலங்கையில் சிங்களத்தவர்கள் தமது கட்சியை வளர்ந்து மிகச்சிறந்த அரசியல் எதிர்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் தமிழர் பிரதேசத்தில் பழைமையான மூத்த தமிழரசுக் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துகொண்டு இருக்கின்றது.

அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியை நம்பித்தான் வாக்களித்தனர் ஆனால் இந்த நிலை தொடருமானால் தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளை நோக்கி பயணிக்கும் நிலை வெகு விரைவில் ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழ் அரசுக் கட்சி தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/PX_FYdq9t70?start=10

NO COMMENTS

Exit mobile version