யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி 100 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செத்துள்ளார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் (18) கட்டானை வழங்குவது தொடர்பில் யாழ் மாவட்ட நிதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் சத்தியமூர்த்தி சார்பில் சட்டத்தரணி த.தினேசன் என்பவர் முன்னிலையாகியிருந்தார்.
சத்தியமூர்த்தி தடுப்பு காவலில் இருந்த போது, அவருக்கு எதிராக இராமநாதன் அர்ச்சுனாவால் பகிரப்பட்ட விடயங்கள் மற்றும் யாழ் வைத்தியசாலையில் அத்து மீறி நுழைந்து நடந்துகொண்ட விடயம் தொடர்பில் முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி என்பவற்றை சுட்டிக்காட்டி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து சத்தியமூர்த்திக்கு எதிராக உண்மைத்தன்மையற்ற செய்திகளை பரப்புவதாக சத்தியமூர்த்தி சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வைத்தியர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவிக்கு அவதூரு பரப்புவது வழக்காளியின் நோக்கம், இல்லை எனவும் அவதூறாக பரப்பப்பட்ட விடயங்களுக்காக பொறுப்பு கூறல் தொடர்பில் மாத்திரமே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி இனி சத்தியமூர்த்திக்கு எதிராக அவதூறான விடயங்களை பரப்ப கூடாது என உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/Eli0lFE4Bv0