Home இலங்கை சமூகம் தெற்காசிய நாடொன்றில் தரையிறங்கும் போது தீப்பிடித்த விமானத்தால் பரபரப்பு

தெற்காசிய நாடொன்றில் தரையிறங்கும் போது தீப்பிடித்த விமானத்தால் பரபரப்பு

0

பாகிஸ்தானில்(Pakistan) சவுதி ஏர்லைன்ஸ் விமானமொன்று தரையிறக்கத்தின் போது திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

297 பேருடன் சென்ற குறித்த விமானமானது பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் இன்று (11.07.2024) தரையிறங்கும் போது தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் ஓடுபாதை

ரியாத்தில் இருந்து பெஷாவர் வந்தடைந்த இந்த விமானத்தின் தரையிறங்கும் கருவியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, கருவியின் உள்ளே தீப்பிடித்ததால், டயரில் இருந்து புகை கிளம்பியது.

இதற்கிடையில், இதை கவனித்த  ஊழியர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதன்போது உடனடியாக விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு, அவசர கதவு வழியாக பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர்.

விமானத்தில் இருந்த 276 பயணிகளும் 21 பணியாளர்களும் காயமின்றி உயிர் தப்பிதோடு, தீயணைப்பு படையினர் விமானத்திற்கு வந்து புகையை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை சவுதி ஏர்லைன்ஸ் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/saudi-airlines-plane-catches-fire-on-landing-1720724422

NO COMMENTS

Exit mobile version