சவுதி அரேபியாவின் (Saudi Arabia) தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
பூங்காவில், “360 டிகிரி” என்றழைக்கப்படும் ராட்டினர் சுழலும் போது அதை தாங்கும் கம்பம் இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்துள்ளது.
முதலுதவி
இதனால் சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்த நிலையில், இதுதொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Video: Screams, Prayers As Saudi Amusement Park Ride Crashes On Camera https://t.co/LFSKXq80Bq pic.twitter.com/qMFdMMBGTZ
— NDTV WORLD (@NDTVWORLD) July 31, 2025
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
