புதிய இணைப்பு
ஜனாதிபதியின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை நாளை விவாதிக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு முடிவு செய்துள்ளது.
குறித்த விடயத்தை நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சாதாரண பெரும்பான்மை
அதன்படி, நாளை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை விவாதம் நடைபெறும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சில சலுகைகளை ஒழிக்கும் ஜனாதிபதியின் உரிமைகள் ரத்து சட்டமூலம், அரசியலமைப்பின் படி உள்ளது என்றும், சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே குறித்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதன்படி குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/klJkT2BpAZY
