Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : ஆர்பாட்டத்தில் குதித்த பெற்றோர்

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : ஆர்பாட்டத்தில் குதித்த பெற்றோர்

0

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடும் பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (18) பெற்றோர் பரீட்சை திணைக்களத்திற்கு (Department of Examinations, Sri Lanka) முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பரிமாறப்பட்டதாக குற்றம்
சுமத்தப்பட்டிருந்தது.

புலமைப்பரிசில் வினாத்தாள்

இந்தநிலையில், இது தொடர்பாக நேற்று (17) விசேட விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து, புலமைப்பரிசில் வினாத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று வினாக்களின் மதிப்பெண்களை சமமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, பரீட்சையின் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாடசாலை அதிபரும் ஆறு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்திருந்தது.

தீர்மானத்திற்கு எதிர்ப்பு

இந்தநிலையில், இன்று (18) பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குறித்த போராட்ட இடத்திற்கு காவல்துறையினரும் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெற்றோர்கள், இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் இலகுவாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் மற்றும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இன்று பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version