Home இலங்கை அரசியல் தேர்தல் புறக்கணிப்பு விவகாரம் : கஜேந்திரன் எம்.பி உட்பட்டோர் பிணையில் விடுதலை

தேர்தல் புறக்கணிப்பு விவகாரம் : கஜேந்திரன் எம்.பி உட்பட்டோர் பிணையில் விடுதலை

0

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S.Kajendran) மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் இன்று (18) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பு செய்யுமாறு கோரி அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இவ்வாறு பரப்புரையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன் உட்பட சிலரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் கட்டளை
பிறப்பிக்கப்பட்டது.

சட்ட விரோதம் ஆகாது

அந்தவகையில் அவர்கள் இன்றையதினம் நீதிமன்றின் முன்னிலையாகினர்.

அவர்களது
சட்டத்தரணிகள், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதும் புறக்கணிக்கக் கோருவதும்
சட்ட விரோதம் ஆகாது என்று நீதிமன்றில் வாதிட்டனர்.

அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் ஏனைய
சந்தேகநபர்களும் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

NO COMMENTS

Exit mobile version