Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சையின் சர்ச்சைக்குரிய வினாக்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சையின் சர்ச்சைக்குரிய வினாக்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

புலமைப்பரிசில் பரீட்சையின் சர்ச்சைக்குரிய மூன்று வினாக்களுக்கும் பொதுவான புள்ளி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் முன்கூட்டியே வெளியாகி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன் காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.

வழக்கு தொடுப்பு 

குறித்த சம்பவம் அநீதமானது என்று குறிப்பிட்டிருந்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை நேற்று வழங்கியிருந்தது. 

அதன் பிரகாரம் சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் ஆகியோர் அரசாங்கத்துக்கு நட்டஈடு வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், சம்பவம் குறித்து நிபுணர் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளில் பொருத்தமான ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் சர்ச்சைக்குரிய மூன்று வினாக்களுக்கும் சகல பரீட்சார்த்திகளுக்கும் பொதுவான புள்ளிகள் வழங்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version