நாடளாவிய ரீதியில் இன்று (15) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெளியிடும் காலம் தொடர்பான அறிவிப்பை பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றது.
அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நடைபெற்ற பரீட்சை
இந்தப்பரீட்சைக்கு 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகி நண்பகல் 12.15 மணிக்கு நிறைவடைந்தது.
தேர்தல் காலத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி இந்த பரீட்சை நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.