Home முக்கியச் செய்திகள் புலமைப்பரிசில் பரீட்சை : பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை : பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

0

எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் விபரங்களை திருத்த வேண்டி ஏற்பட்டால் இம்மாதம் 9ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் வசதியளிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைக்குரிய பரீட்சார்த்திகளின் பெயர் பட்டியல்கள் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெயர் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகங்கள் இருப்பின்

 நாடளாவிய ரீதியில் 2869 நிலையங்களில் இம்மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ள இப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1911, 0112 784208, 0112 784537 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்கமுடியும் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version